Friday, December 16, 2011

நுகர்வோர் யார்?

          நாம் எல்லோரும் நுகர்வோரே. பிறக்கும்போதும், வாழும்போதும், ஏன் இறந்தபின்னரும் நாம் நுகர்வோர்தாம். ஏனெனில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொன்றிற்கும் விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. பொருளானாலும், சேவையானாலும் காசு கொடுத்துதான் வாங்குகிறோம். தற்போது குழந்தைக்கு, தண்ணீர்கூட காசு கொடுத்துதான் வாங்குகிறோம். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 இன் படி பகுதி 2 (1) (d) பிரிவின்படி யார் காசுகொடுத்து ஒரு பொருளையோ, சேவையையோ வாங்குகிறார்களோ அவர்கள் நுகர்வோர்கள்.


குறிப்பு : தமிழ்நாடு அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் நுகர்வோர் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது.